Devotees barred from visiting Sabarimala due to heavy rains

Advertisment

கேரளாவில் தொடர் மழை காரணமாக, வரும் அக்டோபர் 19- ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டிருப்பதால், பிற பகுதிகளில் இருந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் அக்டோபர் 19- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடைத் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கேரள அரசு, இத்தகைய முடிவை எடுத்துள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் 18- ஆம் தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 20- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

alt="DDD" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5947578f-5fc1-4d92-8384-c0cf132f3aef" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_166.jpg" />